Thursday, November 30, 2006

முதல் பதிவு.

இந்து மதத்திற்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும் இணையத்தில் மலிந்து விட்டன. திராவிடர்கள் என்ற முகமூடியை அணிந்து கொண்டு மகத்துவமான இந்து மதத்தின் மீதும் அதன் உள்ளார்ந்த தத்துவங்கள் மீதும் அழுக்கை வாரி வீசுவதில் ஒரு கைதேர்ந்த கும்பல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்து மத தத்துவங்களை ஆழமாக சென்று படிக்காமல் மேலோட்டமாக எங்காவது கிடைக்கும் சில மொழிபெயர்ப்புகளையும், தாங்களாகவே சில தவறான அர்த்தங்கள் கொடுத்து வெளியிட்ட வேதங்களின் மொழிபெயர்ப்புகளையும் வைத்துக் கொண்டு ஒரு பெரிய கூட்டமே இந்து மதத்திற்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கிறது.

இதற்கு இந்து மதத்தின் உள்ளார்ந்த தத்துவம் என்ன? என்பதை தெளிவாக உணராத சில இந்து மத அன்பர்களை கையில் வைத்துக் கொண்டு அவர்கள் கொடுக்கும் விளக்கம் தான் சரியானது என்பது போல் இந்து மதத்தின் மீது களங்கம் சுமத்தி வருகின்றனர்.

இதனை உடைப்பதே இப்பதிவின் நோக்கம். இந்து மதத்திற்கு எதிராக எழுப்பப்படும் அனைத்து விமர்சனம் மற்றும் கேள்விகளுக்கும் இங்கு விளக்கம் கொடுக்கப்படும்.

இந்து மதத்தின் மகத்துவத்தை தெளிவாக உணர்ந்த என்னால் இந்து மதத்திற்கு கொடுக்கும் சிறு கைம்மாறே இது.

விமர்சனங்கள் வைப்பவர்கள் இந்து மதத்தினை தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் அதில் எவ்வித உள்நோக்கமும் இன்றி இந்து மதத்தை அறிய வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும் கேள்விகளை இங்கு வைக்க கோருகின்றேன்.

விஷ்வா.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது