Monday, January 15, 2007

தமிழர் திருநாளும் முஸ்லிம்களும்!

நல்லடியார் முஸ்லிம்களும் பொங்கலும்(http://athusari.blogspot.com/2007/01/blog-post_14.html) என்ற பதிவில் முஸ்லிம்கள் பொங்கலை கொண்டாடாததற்கு சில காரணங்களை கூறியிருந்தார். அனைத்தும் தங்களது மதத்தை நிலைநாட்ட கூறப்பட்ட விலைபெறாத காரணங்கள்.

பொங்கல் திருநாள் எந்த மதத்தினருக்கும் உரிய தனிப்பட்ட பண்டிகை அல்ல. அது தமிழர்களின் திருநாளாகும். பொங்கல் தமிழர் திருநாள் தான் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஒட்டு மொத்த தமிழர்களும் உலகம் முழுக்க ஒற்றுமையுடன் எவ்வித ஜாதி, மத பேதமின்றி கொண்டாடும் ஒரே விழா பொங்கல் பண்டிகையாகும். இதனை சில கேரளத்தின் ஓணப்பண்டிகையுடன் ஒப்பிடுகின்றனர். கேரள மக்கள் அனைவரும் ஜாதி, மத பேதமின்றி கொண்டாடுவதால் அவ்வாறு தோன்றியிருக்கலாம். ஆனால் அது தவறாகும். ஏனெனில் ஓணப்பண்டிகை தெளிவாக இந்துக்களின் ஐதீகத்துடன் தொடர்புடைய பண்டிகையாகும். மாவேலி என்ற மன்னனோடு தொடர்பு படுத்தி கொண்டாடப்படும் அந்த பண்டிகையை பொங்கல் பண்டிகைக்கு ஒப்பாக கூறுவது சரியல்ல.

பொங்கல் பண்டிகை என்பது உழவர்களுக்கும் அதற்காக உதவும் மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக தமிழர்கள் காலம்காலமாக கொண்டாடப்படுவதாகும்.

தமிழர்கள் நன்றி பாராட்டுவதில் மற்றவர்களை விட முன்னணியில் நிற்பவர்களாவர். தமிழ்நாட்டை பொறுத்தவரை நெல் முக்கிய உணவுப்பொருளாகும். தமிழகமெங்கும் பண்டைய காலம் தொட்டே விவசாயம் முக்கிய தொழிலாகவும் விளங்கி வருகிறது.

எனவே தம்மை வாழவைக்கும் உழவர்களுக்கும், மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக தமிழர்கள் பண்டைய காலம் தொட்டே கொண்டாடும் திருநாளாக இதனை காண்கின்றனர்.

நன்றி பாராட்டும் ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டிய ஒரு விழாவாகும் இது. எனவே தான் இதனை பொதுபண்டிகையாக நமது முன்னோர் ஆக்கினர்.

ஆனால் எல்லா இடத்தும் தம்மை பிரித்துக் காண்பித்து, இவ்வுலகை படைத்த அல்லாவின் நேரடி வாரிசுதாரர்களாக தங்களை காண்பித்துக் கொள்ளும் முஸ்லிம்கள் இப்பண்டிகையிலும் சில நொண்டி காரணங்களை கூறி பிரிந்து நிற்கின்றனர்.

இது ஒன்றும் புதிதல்ல. எங்கும் இஸ்லாம் மயம் ஆக்க விரும்பி அல்லாவின் பாதையில் எதிரிகளுக்கு எதிராக போரிடுவது மட்டுமே தங்களின் வேலையாக கொண்ட முஸ்லிம்கள் மற்ற சமூகத்தினரோடு எப்பொழுதுமே இணைந்து வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.

அவர்களின் பண்டிகைகளை மற்றவர்கள் கொண்டாடவும் அவர்களோடு இணைந்து வாழவும் முடிந்தால் முஸ்லிமாகவே மாறிவிடவும் விரும்பும் அவர்கள், ஒருபோதும் மற்றவர்களின் பண்டிகைகளை கொண்டாடவோ, அவர்களோடு இணைந்து வாழவோ அல்லது மற்ற சமூகத்தினராக மாறவோ விரும்புவதேயில்லை. மட்டுமல்ல அதற்கு அங்கு அனுமதியும் இல்லை. எல்லாம் சர்வாதிகாரம் தான்.

அதற்கு அவர்கள் கூறும் காரணம், அவர்களின் மதம் மட்டுமே உண்மையானதாம்.

போகட்டும். மற்ற மதத்தினரோடு தான் இணைந்து வாழவேண்டாம். நாட்டோடாவது இணைந்து வாழக்கூடாதா?

பொங்கல் ஒரு பொது பண்டிகை, தமிழர்களின் பண்டிகை எனபதில் மாற்று கருத்தில்லாத போது பின்னர் ஏன் அவர்கள் இதனை கொண்டாடக் கூடாதாம்.

நல்லடியார் கூறுகிறார்:

* வணங்குவதற்குரியவன் படைத்த இறைவனேயன்றி படைப்புகள் அல்ல.
சரி இருக்கட்டும். பொங்கல் பண்டிகையில் படைப்புகளை வணங்க யார் கூறினார்கள். பொங்கல் பண்டிகையின் நோக்கமே உழைப்பாளர்களுக்கு நன்றி செலுத்துதல் மட்டுமே. அதனை யாராவது கொண்டாடும் பொழுது தங்கள் தெய்வங்களை வணங்கினார்கள் என்றவுடனோ, அல்லது கொண்டாடுபவர்கள் அங்கு வைத்திருக்கும் பானையையும், சூரியனையும் வணங்கிய உடன் பொங்கல் பண்டிகையே படைப்புகளை வணங்கும் பண்டிகையாகி விடுமா?

சரி அப்படியே ஒவ்வொருமதத்தினரும் தங்கள் இறைவனை அப்பொழுது வணங்குகின்றனர் எனில் நீங்களும் உங்கள் இறைவனை வணங்கிக் கொள்ளுங்களேன். யார் தடுப்பர்?
* மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன்,இறைவனுக்கு நன்றி செலுத்தியன் ஆக மாட்டான்.
அட பொங்கலின் நோக்கமே அதுதானய்யா. உழவனுக்கும் உழ உதவும் மாடுகளுக்கும் நன்றி செலுத்துவது தானே பொங்கல் பண்டிகை. அவ்வாறெனில் பொங்கல் பண்டிகையை தாராளமாக இஸ்லாமியாக கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாமே?
* உழைப்பவரின் வியர்வை நிலத்தில் விழும் முன் உழைப்பிற்கான கூலியைக் கொடுத்து விடச்சொல்லி உடல் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது இஸ்லாம்.
பொங்கல் பண்டிகை அவ்வாறு கொடுக்காதே என்றதா? உழைப்பாளர்களை மகிமை படுத்துவதும் அவர்களுக்கு நன்றியுரைப்பதும் தானேய்யா பொங்கலின் நோக்கம்.

சொல் ஒன்று செயல் ஒன்று என்பதற்கு இன்றைய முஸ்லிம்கள் நல்ல உதாரணப்புருஷர்களாக இருக்கின்றனர். அதைத் தான் நல்லடியாரின் பொங்கல் கொண்டாடாததற்கான நொண்டி வாத பதிவும் சாட்சியாக உள்ளது.

இங்கு மற்றொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நல்லடியாரின் அந்த பதிவில் சிந்தாநதி அவர்கள் சில அழகான கேள்விகளை கேட்டிருந்தார்கள். அதற்கு பதில் சொல்வதற்கு முடியாமல் பின்னூட்டத்தில் தமிழ்வாணன் என்பவர் கூறிய ஓர் நொள்ளை வாதத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவர் அழகான பதில் கொடுத்து விட்டதாக புழுகிக் கொள்கிறார் நல்லடியார்.
//பொங்கல் என்பதை ஒரு உழவர்த்திருநாள் என்ற வகையில் ஏற்றுக்கொள்ளலாம். அழகு அவர்கள் சொல்லியிருப்பது போல, பொங்கல் பானைக்கு திருநீறெல்லாம் பூசுவது, இந்து தெய்வ உருவப்படங்களை காட்சியில் வைப்பது ஒரு பொதுவான பண்டிகையை 'மத'ப்படுத்தும் செயலே. இதுவே முஸ்லீம்களை விலக்கிவைத்தது போல ஆகிவிட்டது தான். // - தமிழ்வாணன்

தமிழ்வாணன்,

சிந்தாநதிக்கு நான் சொல்ல நினைத்ததை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்!//

quote - நல்லடியார்.
பொங்கல் உழவர் திருநாள் என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்வாணன் கூறியதையாவது நல்லடியார் ஏற்றுக் கொண்டாரே அதுவே பெரிய விஷயம்.

ஆனால் அதன் பின் தமிழ்வாணன் கூறிய காரணம் தான் முஸ்லிம்கள் பொங்கலை கொண்டாட விடுவதை விட்டு தடுக்கிறது எனில் எனக்கு கூற ஒன்றுமே இல்லை.

கிராமப்புறத்தில் முதியோர்கள் ஒரு கதை சொல்வார்கள்:

"குளத்தை கோவித்துக் கொண்டு .......... கழுகாமல் சென்றானாம்".

கதை புரிகிறதா?

இது போல் தான் இருக்கிறது இவர்கள் சொல்லும் காரணமும்.

பொங்கல் திருநாள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானது தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனை ஒரு மதத்தினர் கொண்டாடும் பொழுது பானையில் திருநீறு பூசுவதும், அவர்கள் வணங்கும் தெய்வங்களின் படங்களை வைப்பதும் அவர்கள் விருப்பம். அதற்காக அந்தப்பண்டிகை அந்த மதத்தினரின் பண்டிகையாக மாறி விட்டது என்று அர்த்தமா?

அவன் எனக்கு விருப்பமில்லாததை பண்டிகையில் செய்கிறான், எனவே நான் அப்பண்டிகையை கொண்டாட மாட்டேன் என்று கூறுவது சுத்த மடத்தனம் இல்லாமல் வேறு என்ன?

நான் கேட்கிறேன்: ஒருவேளை நாளை எல்லா இந்துக்களும் முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத்தை நாங்களும் கொண்டாடுகிறோம் எனக் கூறிக் கொண்டு சாமி படங்களை வைத்து கும்பிட்டும், பானைகளில் திருநீறு பூசி பிரியாணி வைத்தும் சாப்பிட்டால் உடன் முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடுவதை நிறுத்தி விடுவார்களா?

அவர்கள் பானையில் திருநீறு பூசி, சாமி படங்களை வைத்து மிக சந்தோஷமாக கொண்டாடத் தொடங்கிய காலங்களில் முஸ்லிம்கள் அப்பண்டிகையை விட்டு விலகி இருந்ததால் தானே அது அவ்வாறு இந்து பண்டிகை போல் தோற்றம் பெற்று விட்டது? இந்த தவறை திருத்தவாவது முஸ்லிம்களும் அப்பண்டிகையை கொண்டாட முன்வரவேண்டும். அதன் மூலம் தமிழர் திருநாள் எல்லோருக்கும் பொதுவானது தான் என்ற எண்ணத்தை திரும்ப வலுபெற செய்ய வேண்டும்.

வேண்டுமெனில் நீங்களும் பொங்கல் பண்டிகையின் பொழுது ஒரு சிரப்புப் பிரார்த்தனை நடத்தி விட்டுப் போங்களேன்.

எப்படியோ தமிழர் திருநாளை தமிழர்கள் எனக் கூறிக் கொண்டிருப்போர் அனைவரும் கொண்டாட முன்வரவேண்டும் என்பதே நமது ஆசை.

2 comments:

✪சிந்தாநதி said...

புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி விஷ்வா!

வாழ்த்துக்கள்

கால்கரி சிவா said...

மிக நல்ல பதில்கள். மிக நல்ல பணி. தொடரட்டும் உங்கள் பணி.

மிக்க நன்றி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது